பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்ச்சுவடிப் பாதுகாப்புப் பயிலரங்கு





















பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்ச்சுவடிப் பாதுகாப்பும் மின்னணு முறையில் இணையத்தில் ஆவணப்படுத்தலும் எனும் பொருளில் தேசியஅளவிலான ஒருநாள் பயிலரங்கு
 
தமிழ்ச் சுவடிகள் நிறைந்திருக்கும் சுவடிக் கருவூலமாக திருநெல்வேலி மாவட்டம் திகழ்கிறது. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் சங்கஇலக்கியச் சுவடிகளைத் தேடி திருநெல்வேலி வந்தார். 

திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி மாவட்டம் முழுக்க தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடியலைந்தார். தள்ளாத தன் 84 ஆண்டுவாழ்நாளில் 3000 க்கும் அதிகமான தமிழ்ஓலைச் சுவடிகளைத் தேடிக்கண்டறிந்து அரியநூல்களாகப் பதிப்பித்தார். 

அவரது பணியை அடியொற்றி இளையசமுதயமும் தமிழ் ஆய்வாளர்களும் அரிய தமிழ்ச்சுவடிகளைத் தேடிச் சேகரித்து,முறையாக அவற்றை இணையத்தில் ஆவணப்படுத்தும் முறையைக் கற்றுத்தரும் பொருட்டு பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் தன்னாட்சி நிதியுதவியில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்ச்சுவடிப் பாதுகாப்பும் மின்னணு முறையில் இணையத்தில் ஆவணப்படுத்தலும் எனும் பொருளில் தேசியஅளவிலான ஒருநாள் பயிலரங்கு 29.9.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்ச் சுவடிப்பாதுகாப்புத் தேசியப் பயிலரங்கு நடைபெற்றது 

தொடக்கவிழா

தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசுகிறார். ஆட்சிக்குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை பயிலரங்கிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரை ஆற்றினார். 

திருநெல்வேலியில் வசிக்கும், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரின் வழித்தோன்றல் ரா.சாமிநாதன் தமிழ்த்துறை ஆவணக்காப்பகத்திற்குச் சுவடிகளைத் தந்து சுவடிப் பாதுகாப்புப் பணியினைத் தொடங்கி வைத்தார்.

 கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக்,பேராசிரியர் மேலும் சிவசு ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் அ.மு.அயூப்கான் அறிமுகவுரையாற்றினார்.

ஆட்சிக்குழுப் பொருளாளர் அல்ஹாஜ் எச்.எம்.சேக் அப்துல்காதர்,ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர் ஆகியோர் முன்னிலை வகிக்கித்தனர்.

சங்க இலக்கியச்சுவடி ஆய்வாளர் பங்கேற்பு

விழாவில் சிறப்பு விருந்தினராகச் சங்க இலக்கியச் சுவடிஆய்வாளரும்  பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளியின் முதுநிலை ஆய்வாளருமான முனைவர் த.ராஜேஸ்வரி கலந்துகொண்டு, “தமிழ்ச்சுவடிப் பாதுகாப்பு இன்றைய தேவை” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அமர்வு- 1
முதல் அமர்வில் “திருநெல்வேலி மாவட்டத் தமிழ்ச் சுவடிகள் சேகரிப்பில் களஆய்வு அனுபவங்கள்” எனும் தலைப்பில் ம.தி.தா.இந்துக் கல்லூரி மேனாள் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் வே.கட்டளை கைலாசம்  சிறப்புரையாற்றினார்.

அமர்வு- 2
 ஓலைச் சுவடிகள் சேகரிப்பு எனும் தலைப்பில் தமிழ்ச்சுவடி ஆய்வாளர் ஈ.சங்கர நாராயணன் சிறப்புரையாற்றினார்.

அமர்வு- 3
மூன்றாம் அமர்வில் “மின்னணு முறையில் தமிழ்ச் சுவடிகளைச் செம்மையாக்கி இணையத்தில் ஆவணப்படுத்துதல்” எனும் தலைப்பில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வரும் கணினித்துறை ஆய்வறிஞருமான முனைவர் மு.முகமது சாதிக் சிறப்புரையாற்றினார்.

அமர்வு- 4
நான்காம் அமர்வில் “சித்தமருத்துவச் சுவடிகளைப் பாதுகாத்தலில் நவீன முறைகள்” எனும் தலைப்பில் திருநெல்வேலி அரசினர் சித்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் கோ.சுபாஷ் சந்திரன் சிறப்புரையற்றினார்.

நிறைவுவிழா
தமிழ்ச்சுவடிகள் பாதுகாப்புத் தேசியப் பயிலரங்கில் கலந்துகொள்ளும் ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ்களைத் தந்து “ சுவடிகளும் கல்வெட்டுகளும்” எனும் தலைப்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட தொல்லியல் துறையின் பணிநிறைவு பெற்ற உதவிஇயக்குநர் சொ.சந்திரவாணன் விழாநிறைவுப் பேருரை ஆற்றினார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் விஜயலட்சுமி நன்றிகூறினார். பயிலரங்க ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை சிறப்பாகச் செய்தது.                                             முனைவர்




ச.மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர்

                              



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்