பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தி.க.சி.குறித்த நூல் வெளியீட்டுவிழா




திருநெல்வேலியில் வாழ்ந்த சாகித்ய அகாடமி விருதுபெற்ற திறானாய்வாளர் தி.க.சி. குறித்த நூல் வெளியீட்டுவிழா பாளை. பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 13.1.2016 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. 

சீதக்காதி தமிழ்ப்பேரவை மற்றும் கல்லூரியின் மாணவர் பேரவை இணைந்து நடத்திய நூல்வெளியீட்டு விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் வரவேற்றுப்பேசினார். 

கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்திப் பேசினார். 

திருநெல்வேலி அகிலஇந்திய வானொலியின் உதவிநிலைய இயக்குநர் மு.சிவப்பிரகாசம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

105 தமிழ் நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் செ.திவான், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் முகைதீன், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி, வரலாற்றறிஞர் செ.திவான் எழுதிய “ தி.க.சி.என்றொரு மானுடன்” எனும் நூலை வெளியிட சிவகாசி அய்யநாடார் கல்லூரி மேனாள் ஆங்கிலப்பேராசிரியர் எம்.இராமச்சந்திரன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் செ.திவானுக்குக் கல்லூரி சார்பில் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாணவர் பேரவைத் தலைவர் அஜ்பத் அலி நன்றி கூறினார்.

படத்தில்: பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப்பேரவை மற்றும் கல்லூரியின் மாணவர் பேரவை இணைந்து நடத்திய நூல்வெளியீட்டு விழாவில் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி, வரலாற்றறிஞர் செ.திவான் எழுதிய “ தி.க.சி.என்றொரு மானுடன்” எனும் நூலை வெளியிட சிவகாசி அய்யநாடார் கல்லூரி மேனாள் ஆங்கிலப்பேராசிரியர் எம்.இராமச்சந்திரன் அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்