“மேலும்” தமிழ் இலக்கிய அமைப்பு திருநெல்வேலியில் நடத்தும் தமிழ்-2015




   2015 இல் தமிழ்இலக்கியப் போக்குகள் குறித்த இருநாள் கருத்தரங்கு
திருநெல்வேலியில் இயங்கிவரும் “மேலும்”தமிழ்இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தில் தமிழ்படைப்பிலக்கியம், ஊடகம் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் சனவரி 30,31 ஆகிய இருநாட்கள் நடைபெற உள்ளன. அக்கருத்தரங்கு குறித்து “மேலும்” தமிழ் இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் மேலும் சிவசு, தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம், செயலாளர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

தமிழ்இலக்கியம் குறித்த திறனாய்வுப் போக்கை ஆய்வுநோக்கில் கல்விப்புலங்களில் வளர்க்கும் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும் தமிழகக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் பயிலும் இளமுனைவர்,முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு தமிழ்ப்படைப்புலகம் குறித்த கருத்தரங்குகளையும் பயிலரங்குகளையும் தொடர்ந்து நடத்திவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் திறனாய்வுத்துறையில் சிறந்துவிளங்கும் தமிழ்த்திறனாய்வாளர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு ரூ 25000 பொற்கிழியையும் ‘மேலும்’ திறனாய்வாளர் விருதினையும் வழங்கிவருகிறது.தமிழ்ப்படைப்பிலக்கியத்துறையில் சிறந்துவிளங்கும் இளம்படைப்பாளர் ஒருவருக்கு மேலும் இளம்படைப்பாளர் விருதினையும் தொடர்இந்து வழங்கிவருகிறது.

தமிழ்-2015 தமிழ்இலக்கியத் திறானாய்வுக் கருத்தரங்கு

2015 ஆம் ஆண்டு தமிழ்க்கல்வி, தமிழ்க்கவிதை,தமிழ்நாடகம்,தமிழ்ச் சிறுகதை,தமிழ்ப் புதினம்,தமிழ்த் திரைப்படம், தமிழ்ச் சிற்றிதழ், தமிழ்த் திறனாய்வுப் போக்குகள் குறித்து ஆராய்ந்து அதன்போக்குகள் குறித்து தமிழகக் கல்லூரிகளில் பயிலும் ஆய்வுமாணவர்களுக்குத் தெளிவுபடுத்தும்பொருட்டு “மேலும்” தமிழ்இலக்கிய அமைப்பு திருநெல்வேலி.ஆர்.டி.ஓ.அலுவலகம் அருகில் உள்ள  தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தில் சனவரி 30,31 ஆகிய இருநாட்கள் நடத்துகிறது. தமிழகத்தின் பிரபல பேராசிரியர்கள், தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ்த் திறனாய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், முனைவர் பட்ட ஆய்வுமாணவர்கள், தமிழ்த்துறைத் தலைவர்கள் பங்கேற்று விவாதங்களை மேற்கொள்ள உள்ளனர்.

தொடக்கவிழா

கருத்தரங்கத் தொடக்கவிழா சனவரி 30 அன்று காலை 10 மணிக்கு தமிழ்வளர்ச்சிப் பண்பாட்டு மையக் கலையரங்கில் நடைபெறுகிறது. கருத்தரங்கத் தலைவராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் அ.ஜான்-டி- பிரிட்டோ கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்துத் தலைமையுரை ஆற்றுகிறார்.மேலும் அமைப்பின் தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம் வரவேற்றுப் பேசுகிறார்.அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் “மேலும்” சிவசு கருத்தரங்க நோக்குரை வழங்குகிறார். தமிழ்வளர்ச்சிப் பண்பாட்டு மையத் துணைத் தலைவர் தி.த.ரமேஷ் ராஜா, திருநெல்வேலி அகிலஇந்திய வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் கண்ணையன் தட்சணாமூர்த்தி,சிறுகதைப்படைப்பாளர் வழக்கறிஞர் எம்.எம்.தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் மகாதேவன் நன்றியுரையாற்றுகிறார்.

அமர்வு- 1  தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கான வழிமுறைகள்
“தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கான வழிமுறைகள்” எனும் பொருளில் காலை 11 -12 வரை நடைபெறவுள்ள அமர்வில் போலந்து வார்சா பல்கலைக்கழகப் பேராசிரியர் தமிழவன் சிறப்புரையாற்றுகிறார்.தமிழாசிரியர் அசின் தங்கராஜ் அவ்வமர்வில் கருத்துரை வழங்குகிறார்.

அமர்வு- 2  2015 இல் தமிழ்க் கவிதைகள் தொடரும் போக்குகள்
“தமிழ்க்கவிதைகள் தொடரும் போக்குகள்” எனும் பொருளில் காலை 12.15 -1.15  வரை நடைபெறவுள்ள இரண்டாம்அமர்வில் தக்கலையைச் சார்ந்த படைப்பாளர் திறனாய்வாளர் ஹெச்.ஜி.ரசூல் கலந்துகொண்டு தமிழ்க்கவிதைகள் தொடரும் போக்குகள் என்ற தலைப்பிலும், கவிஞர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ‘தமிழ்க்கவிதைகள் தனிப்போக்குகள்” எனும் தலைப்பிலும்  சிறப்புரையாற்றுகின்றனர். முனைவர் குரு.சண்முகநாதன் கருத்துரை வழங்குகிறார்.

அமர்வு-3 2015 இல் தமிழ் நாடகப்போக்குகள்
“தமிழ்நாடகப் போக்குகள்” எனும் பொருளில் காலை 2.15 -3.15  வரை நடைபெறவுள்ள மூன்றாம்அமர்வில் தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் இரா.பிரான்சிஸ் சேவியர் தலைமையேற்க திருப்பத்தூர் பேராசிரியர் கி.பார்த்திபராஜா தமிழ்நாடகங்களின் போக்கு குறித்துச் சிறப்புரையாற்றுகிறார். பேராசிரியர் சி.ரமேஷ் கருத்துரை வழங்குகிறார்.

அமர்வு-4 2015 இல் தமிழ்த் திரைப்படப்போக்குகள்
2015 இல் தமிழ்த் திரைப்படப் போக்குகள் எனும் பொருளில் காலை 3 - 4.30  வரை நடைபெறவுள்ள மூன்றாம்அமர்வில் நாகர்கோவில் கல்லூரிப் பேராசிரியர் சி.கணேஷ் தலைமையுரையாற்றுகிறார்.தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினரும் மேனாள் நாடகத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் மு.இராமசாமி  தமிழ்த் திரைப்படப் போக்குகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் திருநாவுக்கரசு கருத்துரை வழங்குகிறார்.

இரண்டாம் நாள் கருத்தரங்க நிகழ்ச்சிகள் (31.1.2016)

அமர்வு- 1 “2015 ஆம் ஆண்டின் தமிழ்ச் சிற்றிதழ்ப் போக்குகள்’
 “2015 ஆம் ஆண்டின் தமிழ்ச் சிற்றிதழ்ப் போக்குகள்’ எனும் பொருளில் காலை 10 -11.20 வரை நடைபெறவுள்ள அமர்வில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் பா.வேலம்மாள் தலைமையுரையாற்றுகிறார். தமிழ்ச்சிற்றிதழ்ப் பொதுப்போக்குகள் எனும் பொருளில் சென்னையைச் சார்ந்த கவிஞரும் கலை இலக்கியத் திறனாய்வாளருமான முபீன் சாதிகாவும், சிற்றிதழ்த் தனிப்போக்குகள் என்ற பொருளில் வாணியம்பாடியைச் சார்ந்த கவிஞர் விமல்சண்முககுமாரும் சிறப்புரையாற்றுகின்றனர். மேலும் அமைப்பின் பொருளாளர் பேராசிரியர் நா.வேலம்மாள் கருத்துரையாற்றுகிறார்.

அமர்வு- 2  2015 இல் தமிழ்ச் சிறுகதைப் போக்குகள்
“2015 இல் தமிழ்ச் சிறுகதைப் போக்குகள்’ எனும் பொருளில் காலை 11.30 -12.15 வரை நடைபெறவுள்ள அமர்வில் திருநெல்வேலி சாராள் தக்கர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ஜெயரதி பொன்மலர் தலைமையுரையாற்றுகிறார். ஆந்திரமாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகப் பேராசிரியர் விஷ்ணுகுமரன், தமிழ்ச் சிறுகதைப் பொதுப்போக்குகள்’ எனும் தலைப்பிலும் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நிதா எழிலரசி, தமிழ்ச் சிறுகதைத் தனிப்போக்குகள் எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றுகின்றனர். சங்கரன்கோவில் பி.எம்.டி .கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் வ.ஹரிஹரன் கருத்துரை வழங்குகிறார்.

அமர்வு- 3 2015 இல் தமிழ் நாவல் போக்குகள்
2015 இல் தமிழ் நாவல் போக்குகள் எனும் பொருளில் காலை 12.15- 1.15 வரை நடைபெறவுள்ள அமர்வில் திருநெல்வேலி பேட்டை மதிதா இந்துக் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ஆ.செல்லப்பா தலைமையுரையாற்றுகிறார். நாகர்கோவில் பேராசிரியர் மற்றும் நாவலாசிரியர் குமார செல்வா, 2015 ஆம் ஆண்டின் தமிழ் நாவல் பொதுப் போக்குகள் எனும் தலைப்பிலும் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் திருநாவுக்கரசு தமிழ் நாவல் தனிப்போக்குகள் எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றுகின்றனர்.திருநெல்வேலி சாரதா மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.பர்வதகிருஷ்ணம்மாள் கருத்துரை வழங்குகிறார்.

அமர்வு- 4 2015 இல் தமிழ்த் திறனாய்வுப் போக்குகள்
2015 இல் தமிழ்த் திறனாய்வுப் போக்குகள் எனும் பொருளில் பிற்பகல் 2.15 - 3.00 வரை நடைபெறவுள்ள அமர்வில் தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரிப் பேராசிரியர் கோ.புவனேஸ்வரி தலைமையுரையாற்றுகிறார். தமிழ்த்திறனாய்வுப் பொதுப்போக்குகள் எனும் தலைப்பில் பேராசிரியர் ஜே.ஆர்.வி.எட்வர்ட் சிறப்புரையாற்றுகிறார்.


நிறைவுவிழா
பிற்பகல் 3.00- 4.00 வரை நடைபெறவுள்ள நிறைவுவிழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறைத்தலைவர்  பேராசிரியர் சு.அழகேசன் தலைமையுரையாற்றுகிறார். “தொல்காப்பியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்” எனும் தலைப்பில் சென்னை பேராசிரியர் துரை.சீனிச்சாமி கருத்தரங்க நிறைவுப் பேருரையாற்றுகிறார். மேலும் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் நன்றி கூறுகிறார். இக்கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் பேராசிரியர் சிவசு (9443717804) அவர்களைச் செல்பேசியில் தொடர்புகொள்ளலாம்.
பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,செயலாளர்,மேலும்,திருநெல்வேலி








Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்