பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பட்டமளிப்பு விழா




பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 2.4.2016 அன்று நடைபெற்ற பட்டமளிப்புவிழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி.பாஸ்கர் 607 மாணவமாணவியருக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்.
 
 விழாவில் கல்லூரி முதல்வர் மு.முகமது சாதிக் வரவேற்றுப் பேசினார்.கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹுர் ரப்பானி தலைமையுரை ஆற்றினார். கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசைன், கல்லூரித் தேர்வாணையர் பேரா.சுப்ரமணியன், அரசுதவிபெறா வகுப்புகளின் இயக்குநர் பேராசிரியர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்புவிருத்தினராய் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி.பாஸ்கர் 607 மாணவமாணவியருக்கு பட்டங்களை வழங்கிப்பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றினார்.


அவர் தமது உரையில் “ சமய நல்லிணக்கத்திற்குச் சான்றாகத் திகழும் இந்தக் கல்லூரியின் மாணவர் பேரவைத் தேர்தல்கள் சனநாயக முறைப்படி இ-வோட்டிங் என்கிற மின்னனு முறைப்படி மிகச்சிறப்பாக நடத்தப்படுவதை பாராட்டுகிறேன்.

தேர்தல்கள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையைத் ஏற்படுத்தும் இது போன்ற முயற்சிகள் சமூகத்திற்கு பேருதவி செய்யும். பட்டம் பெற்றுள்ள பட்டதாரிகள் அனைவரும் வாக்காளர்கள் என்ற தகுதியோடு இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க உள்ளீர்கள். 100 விழுக்காடு அனைவரும் வாக்களித்து சனநாயகக் கடமையை நிறைவேற்ற  வேண்டுகோள் வைக்கிறேன்.  

 உள்ளுவது உயர்வுள்ளல் என்று மிக அழகாக திருக்குறள் உணர்த்துகிறது. நம் எண்ணப்படியே நம் வாழ்க்கை அமைகிறது. எதிர்மறை எண்ணங்களை விலக்கி வாழுங்கள்.கற்றவற்றை வாழ்வில் கடைப்பிடியுங்கள்.

 தேசியதரமதிப்பீட்டுக்கல்விக்குழுவின்  (நாக்) மூன்றாம் சுற்று மதிப்பீட்டு ஆய்வில் 3.40 எனும் தரமதிப்பெண்ணுடன் ஏ என்னும் உயர்தரத்தை சமீபத்தில் இக் கல்லூரி பெற்றுள்ளது.ஆற்றல்சால் கல்லூரியாக உருவாக வாழ்த்துகிறேன். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை வெளிநாட்டுக்கு உங்கள் மாணவர்களை அனுப்புங்கள். 




அங்குள்ள மாணவர்களை இங்கே பயில வாய்ப்பளியுங்கள். கல்வி என்பது வகுப்பறைக்குள் மட்டும் அடங்குவதில்லை, வெளியில் கற்க எவ்வளவோ உள்ளது. நீங்கள் பெற்றுள்ள பட்டம்,  உயர்வாழ்வு எனும் பயணத்திற்கு உங்களுக்கு வாழங்கப்பட்ட கடவுச்சீட்டு என்பதை உணருங்கள்.” என்று பேசினார்.பட்டம் பெற்ற மாணவர்கள் குறித்த அறிக்கையை பேரா.அஸ்ரப்அலி வழங்கினார்.கல்லூரி முதல்வர் அனைவருக்கும் பட்டமளிப்பு விழா உறுதிமொழியைச் செய்துவைத்தார்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்