ராஜ் தொலைக்காட்சியின் "அகடவிகடம்" நிகழ்ச்சியில் சௌந்தர மகாதேவன்

எனக்குள் கனவுகளை விதைத்தவர்
.........................................................................
சௌந்தர மகாதேவன்


என் தந்தை திரு.ம. சவுந்தரராசன் தூய சவேரியார் பள்ளியில் என் தமிழாசான். இந்தச் சின்ன உலகிற்குள்ளும் பெரிய கனவுகளை எனக்குள் விதைத்த மாமனிதர். எல்லா சமயங்களையும் மதிக்கவேண்டும் என்று கற்றுத்தந்தவர்.
அவர் யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காதவர்.என் எழுத்துக்களைப் பெரிதும் விரும்புபவர். கல்லூரி ஆசிரியராக நான் வரவேண்டும் என்று கனவுகண்டவர். அம்பிகாவதி திரைப்படத்தில் வரும் “சிந்தனை செய் மனமே..”பாடலை அவர் பாடக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். முறைப்படி இசை பயின்றவர். தேவாரப் பதிகங்களையும் ஆழ்வார் பாசுரங்களையும் நெக்குருகி அவர் பாடக்கேட்டுத் தமிழ்த்துறைக்கு வந்தவர்களில் நானும் ஒருவன் என்பது எனக்குப் பெருமை.
தன் பணிக்காலம் முழுக்க மிதிவண்டியில்தான் பள்ளிக்குச் சென்றிருகிறார். நேர்மையும் சத்தியமும் பேதம்பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக இருப்பதும் யாரையும் கடிந்துபேசா இனிமையும் ஆசிரியப்பணியின்பால் அவர் கொண்ட பக்தியும் அவரது சிறப்புகள்.
எழுத்துத்திறன், நடிப்புத்திறன், இசைத்திறன் யாவும் அவருக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.
அவர் பெயரான சௌந்தர என்பதில் தொடங்கி, மகாதேவனாக உருப்பெற்ற சௌந்தர மகாதேவன் இன்று 15.5.2016 ஞாயிறு காலை 10.30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியின் அகடவிகடம் நிகழ்ச்சியில் பங்கேற்று “ எனக்குள் கனவுகளை விதைத்த என் தந்தை” என்கிற தலைப்பில் உரையாற்றி
உள்ளேன்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்