தினமலர் படிக்கலாம் வாங்க பகுதியில் சௌந்தர மகாதேவனின் தண்ணீர் ஊசிகள் கவிதைத் தொகுதி குறித்த விமர்சனம்



நன்றி திரு.ஜி.வி.ரமேஷ்குமார் அவர்களே
...........................................................................
நாங்கள் இதுவரை சந்தித்ததில்லை ஆனால் நான்காண்டுகளாக எழுத்தின் மூலம் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.மிகக் கூர்மையான மொழிநடை இவருடையது.
அவர் எழுதக் கேட்டுக்கொண்டபின் தினமலரில் இதுவரை இந்த நான்காண்டுகளில் நாற்பது கட்டுரைகள் எழுதியிருகிறேன்.
மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல்,விருதுநகர், தேனி மாவட்டங்களிலும் இணையதளத்தின் மூலம் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான வாசகர்களிடம் என் எழுத்துகளைக் கொண்டு செல்பவர்.
தரமான நூல்களைத் தந்துள்ள நல்ல படைப்பாளர். திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவதில் வல்லவர்.
தினமலர் “படிக்கலாம் வாங்க” பகுதியில் இன்று என் தண்ணீர் ஊசிகள் கவிதைத் தொகுப்பு குறித்து அழகாக தினமலர் ஆசிரியர் திரு.ஜி.வி.ரமேஷ்குமார் எழுதியுள்ளார். நன்றி என்ற ஒற்றைச் சொல்லால் அன்புக்குரிய நண்பருக்கு நன்றி செலுத்துகிறேன்.என் கவிதைகளை மேலும் பதிப்பகத்தின் மூலம் வெளிட்டுள்ள என் ஆசான் பேராசிரியர் மேலும் சிவசு அவர்களுக்கு நன்றி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்