மாணவர் வாசகர் வட்டம் - சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்

திருநெல்வேலியில் மாணவர் வாசகர் வட்டம்
....................................................................................................

மாணவர்களை வாசிக்க வைக்காமல் எத்தனை புத்தகத்திருவிழாக்கள் நடத்தினாலும் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்று ஒரு மாணவர் வகுப்பில் பேசும்போது குறிப்பிட்டார். 

வாசிக்கும் பழக்கத்தை இளையதலைமுறையிடம் ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் நெடுநாட்களாகவே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.கலலூரி முதல்வரிடம் தெரிவித்தேன். 

தாராளமாய் மாணவர் பேரவையோடு இணைந்து மாணவர் வாசகர் வட்டத்தை உருவாக்குங்கள் என்று தெரிவித்தார். சீதக்காதி தமிழ்ப் பேரவையோடு மாணவர் பேரவையும் இணைந்தது. கடந்தமாதம் மாணவர் வாசகர் வட்டம் தொடங்கியது.

ஒவ்வொருமாதமும் முதல் திங்கட்கிழமை மதியம் இரண்டுமணி முதல் நான்குமணி வரை என்று அறிவித்தோம். எழுதவிரும்பும் பேசவிரும்பும் வாசிக்க விரும்பும் மாணவர்கள் வரலாம் என்று அறிவித்தோம்.

கடந்தமாதம் நடந்த நிகழ்வுக்கு எழுபது மாணவ மாணவியர் வருகை தந்திருந்தனர். நூல் தேர்வு முதல் நூல் விமர்சனம் வரை மாணவர்களே செய்தனர்.பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்கிற நூலைத் திறனாய்வு செய்து மாணவர் பேரவைச் செயலாளர் அனிஷா நிகழ்வைத் தொடங்கிவைத்தார். நாளை இரண்டாம் கூட்டம்.புத்தகத் திருவிழாக்களை இனி வகுப்பறைகளில் தொடருவோம். 

நம்பிக்கையோடு இளையசமுதாயத்தின் இனியஉதவியோடு. இந்தமாதம் வண்ணதாசனின் ஒரு சிறுஇசை குறித்து ஒரு மாணவி பேசுகிறார். தமிழவனின் திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல் எனும் நூலை மற்றொரு மாணவர் திறனாய்வு செய்கிறார். 

 திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தொடங்கப்பட்ட மாணவர் வாசகர் வட்டம் தமிழகமெங்கும் பரவும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உற்சாகமாகப் பங்கேற்கும் மாணவசமுதாயம் தரும் நம்பிக்கை!

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்