சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவையின் சார்பாக மாணவர் வாசகர் வட்டம் நூல் திறனாய்வு நிகழ்ச்சி

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவையின் சார்பாக மாணவர் வாசகர் வட்டம் நூல் திறனாய்வு நிகழ்ச்சி
                மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்து நூல்களை திறனாய்வு செய்யும் நோக்கில் பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவை - மாணவர் பேரவையுடன் இணைந்து மாணவர் வாசகர் வட்ட நூல் திறனாய்வு நிகழ்ச்சியை 06.11.2017 அன்று நடத்தின. மாணவர் பேரவைத் தலைவர் ஜா. அஹமது தமீமுல் அன்சாரி வரவேற்றுப் பேசினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் தலைமையுரையாற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மாணவர் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் ச. மகாதேவன் நல்ல நூல்களைத் திறனாய்வு செய்வது எப்படி? எனும் தலைப்பில் அறிமுகவுரையாற்றினார்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் எனும் நூலை மாணவர் மு. பேச்சிராஜ்,  திசைகள் நோக்கிய பயணம் எனும் நூலை மாணவி பா.ர. தாரணி, சங்கரராம பாரதி எழுதிய தன்னம்பிக்கை நாட்காட்டி எனும் நூலை மாணவர் வ. பாலமணிகண்டன், நெப்போலியன் ஹில் எழுதிய இப்போதே செய் எனும் நூலை மாணவர் ஜெ. அருள் ஆசிர்,  எழுத்தாளர் பாண்டுரங்கன் எழுதிய விடுதலைவேள்வியில் மதுரை, சிராஜூல் ஹசன் எழுதிய தீர்ப்பு நேரங்கள் எனும் நூல்களை மாணவி மு. சுப்பு லட்சுமி, தீரா நதி இதழின் சிறுகதை எனும் தலைப்பில் த. முத்தரசனும் திறனாய்வுரையாற்றினார்கள். நூல்திறனாய்வு  குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர் பேரவைச் செயலாளர் மனிஷா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறையும் மாணவர் பேரவையும் இணைந்து செய்திருந்தது.



படத்தில்:பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்ற மாணவர்வாசகர் வட்ட நிகழ்வில் பங்கேற்று மாணவர்கள் நூல்களைத் திறனாய்வு செய்கின்றனர்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்