பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வளாக நேர்காணல் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பயிற்சி நிகழ்ச்சி




பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வளாக நேர்காணல் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பயிற்சி நிகழ்ச்சி
                பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சி நிறுவனம், பொங்கு வென்சர்ஸின் ஒரு பகுதியாகத் திகழும் வீட்டன் நிறுவனம் திருநெல்வேலியின் மூன்று சுழற்கழகங்களுடன் இணைந்து 24.03.2018 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 40 தொழில் நிறுவனங்கள் பங்குபெறும் வளாக நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்துகிறது.
பட்டதாரிகள் பங்கேற்கலாம்:
                எம்.ஈ., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., பி.ஈ., பி.டெக்., பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஐ.டி.ஐ., டிப்ளமோ பெற்றவர்கள் மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவியர் இவ்வேலை வாய்ப்பு முகாமில் பங்குபெறலாம். பதிவுக்கட்டணம் ஏதுமில்லை. வணிகரீதியாக நடத்தப்படாமல் தென் மாவட்டப் பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள றறற.எநவயn.in எனும் இணையதளத்தில் பெயர்ப்பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக் கட்டணமோ வேறு எந்தக் கட்டணமோ செலுத்தத் தேவையில்லை. பட்டதாரிகள் தங்கள் சுய விவரக் குறிப்பின் 10 பிரதிகளோடு, 10 பாஸ்போர்ட் நிழற்படங்களையும் இந்நிகழ்வின்போது கொண்டுவர வேண்டும். தமிழகம் முழுக்கவிருந்து வருகை தரும் நாற்பதிற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தகுதியான பட்டதாரிகளைத் தேர்வு செய்யவிருக்கின்றன.
வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பயிலரங்கு:
                நிகழ்வின் மற்றொரு அம்சமாக, இப்போது பயிலும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பயிலரங்குக் கல்லூரி உரையரங்கில் நடைபெறவுள்ளது. போட்டித் தேர்வின் மூலமாக எவ்வாறு வேலை வாய்ப்பினைப் பெறுவது?” என்ற தலைப்பில் திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் கே. இளம் பகவத், ஐ.ஏ.எஸ். சிறப்புரையாற்றுகிறார்.
                பொங்கு வென்சர்ஸ் எனும் தொழில் முனைவோர் வழிகாட்டி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் வினோத் வேலை தருவோராக எவ்வாறு மாறுவது?” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
                ஈ-கொலீக் மென்பொருள் நிறுவனத்தின் டாக்டர் சுஜீன், ஹோட்டேலியர்ஸ் டாக் எனும் நிறுவனம், டிடிடெக் நிறுவனம் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகின்றன. 24.03.2018 அன்று காலை 9 மணிக்கு திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் இம்முகாமைத் தொடங்கி வைக்கிறார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்நிகழ்வில் மாணவ மாணவியர், பட்டதாரிகள், பொதுமக்கள் திரளாகப் பங்குபெற்றுப் பயன்பெறலாம்என்று பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் டாக்டர் மு. முஹம்மது சாதிக், பொங்கு வென்சர்ஸ் நிறுவன இணை நிறுவனர் பா. பிரீத்தி, தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் ச. மகாதேவன் ஆகியோர் பங்கேற்றுத் தெரிவித்தனர்.

                                                   முதல்வர்,
                                   டாக்டர் மு. முஹம்மது சாதிக்


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்