இருட்டறைகள் எனக்கு



இருட்டறைகள் எனக்கு இதமானவை ஒப்பனைகள் ஏதுமின்றி கற்பனைகள் அவசியமின்றி இருப்பறிய முடியா
 இருட்டறைக்குள் கழிகின்றன
என் பொழுதுகள் .
என் அசைவுகளை
 உன் இசைவின்றி நானே
இங்கு தீர்மானிக்கிறேன் .
சாளரங்கள் அற்ற இவ்வறையில் என் பெருமூச்சைக் கூட உன்னால் கேட்க  முடியாது .
பூனைக்குப் பயந்த எலியாய் புறந்தள்ளி இருக்கும் என்னை உன் வரவால் வாசலுக்கு இழுத்துவிடாதே இருட்டறைகள் எனக்கு இதமானவை

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்