பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேரிடர் நிவாரண உதவிக்குழுவின் சார்பில் 92 மாணவர்கள் மருத்துவமுகாமில் தன்னார்வத் தொண்டராற்ற சென்னை சென்றனர்




பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேரிடர் நிவாரணஉதவிக்குழுவின் சார்பில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டு ஆட்சிக்குழு, பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் மூவாயிரம் மாணவமாணவியர் நெல்லை மாநகரப் பொதுமக்கள் உதவியோடு  கடந்தவாரம் 4 லட்சம் மதிப்புள்ள உதவிப்பொருட்கள் மற்றும் பணமாகவும் சேகரிக்கப்பட்டன.

மருத்துவ முகாமுக்கு மாணவர்கள் உதவக்கிளம்பினர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவும்பொருட்டும், அவர்களுக்கு உதவிமுகாம்கள் நடத்தும்பொருட்டும், சென்னையில் முகாமிட்டுள்ள மருத்துவர்களோடு இணைந்து மருத்துவ முகாம்களில் உதவும்பொருட்டும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பேரிடர் நிவாரண உதவிக்குழுவின் சார்பில் இருபேராசிரியர்கள் தலைமையில் 92 மாணவர்கள் தன்னார்வத் தொண்டராற்ற 14.12.2015 மாலை 6.30 மணிக்குச் சென்னை கிளம்பினர். அவர்களை ஊக்குவித்து ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரிப்பள்ளிவாசல் பேஷ்இமாம் கே.எஸ்.பி.சேக்அப்துல்காதர் இறைவாழ்த்து ஓதினார். பேரிடர் நிவாரணஉதவிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ச.மகாதேவன் வரவேற்றுப்பேசினார். 

கல்லூரிமுதல்வர் பேராசிரியர் மு.முகமது சாதிக் அறிமுகவுரையாற்றினார். பேரிடர் நிவாரணஉதவிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அ.மு.அயூப்கான்,முனைவர் அ.சே.சேக்சிந்தா, பேராசிரியர் எம்.சேக்முகைதீன் பாதுஷா,முனைவர் ஜாகிர் ஹூசைன்,முனைவர் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது காஜா, பேராசிரியர் சேக்மன்சூர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர் பேரவைத் தலைவர் அஜ்பத்அலி, கல்லூரி மாணவர் உதவிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் குர்ஷித்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கணினிப்பயன்பாட்டுடன் கூடிய வணிகவியல் துறைஉதவிப் பேராசிரியர் உமரே பாருக்,வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சிந்தா மதார் ஆகியோர் தலைமையில் 92 மாணவர்கள் 15.12.2015 முதல் 19.12.2015 வரை 5 நாட்கள்  சென்னையில் தங்கிப் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள நிவாரணப்பொருட்கள் வழங்கும் முகாம்களில் பங்கேற்று உதவிசெய்வதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் நடைபெறும் மருத்துமுகாம்களிலும் தன்னார்வத்தொண்டர்களாகப் பல்வேறுபணிகளைச் செய்ய உள்ளனர். 

நிவாரணப் பொருட்கள்

கல்லூரி ஆட்சிக்குழு, கல்லூரி மாணவ மாணவியர், பேராசிரியர்கள், அலுவர்கள், நெல்லை மாநகரின் பல்வேறுபகுதிகள் சார்ந்த பொதுமக்கள், தன்னார்வத் தொண்டர்கள் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள  நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் மையத்தில் வழங்கியுள்ள 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வரும்வாரத்தில் லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேரிடர் நிவாரண உதவிக்குழுவால் இந்த வாரம் நேரடியாகக் கொண்டுசேர்க்கப்பட உள்ளது.


படத்தில்: பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பேரிடர் நிவாரண உதவிக்குழுவின் சார்பில் 92 மாணவர்கள் மருத்துவமுகாமில் தன்னார்வத் தொண்டராற்ற சென்னை சென்றனர்.


                                   முனைவர் ச.மகாதேவன்,
                                    தமிழ்த்துறைத்தலைவர்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்