பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பேரிடர் நிவாரண உதவிக்குழுவின் சார்பில் வெள்ளநிவாரணப் பொருட்கள் சேகரிப்பு




 பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேரிடர் நிவாரணஉதவிக்குழுவின் சார்பில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

 கல்லூரியில் பயிலும் மூவாயிரம் மாணவமாணவியர் இப்பணியைத்தொடங்கியுள்ளனர். கல்லூரி மாணவ மாணவியர், பொதுமக்கள், தன்னார்வத்தொண்டர்கள் தங்களிடம் உள்ள பொருட்களைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள  நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் மையத்தில் 9.12.2015  காலை 8 மணிமுதல் தரலாம். 

 வேட்டி, நைட்டி, லுங்கி, துண்டு, சட்டை, சேலை,சுடிதார் போன்ற ஆடைகள், போர்வைகள்,பாய்கள்,டார்ச்லைட், எமர்ஜென்சி விளக்குகள், மெழுகுவர்த்திகள்,பிஸ்கெட் பெட்டிகள்,பால்பவுடர் டின்கள், பாத்திரங்கள்,தட்டு,டம்ளர்கள்,டெட்டால்,அத்தியாவசிய மருந்துகள், தண்ணீர்ப் பாட்டில்கள், செருப்புகள், ரஸ்க், குழந்தைகளுக்கான பால்பாட்டில்கள், கொசுவலைகள்,கொசுவர்த்திகள்,பற்பசை,சோப் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தரலாம்.

 9.12.2015 முதல் 13.12.2015 வரை  நிவாரணப்பொருட்களை மாணவமாணவியரோடு பொதுமக்களும் வழங்கலாம். அந்நாட்களில் பெறப்படும் அனைத்துப் பொருட்களும் பேராசிரியர்கள், மாணவர்கள் கொண்ட பேரிடர் நிவாரணக்குழு மூலம் பாதிக்கப்பட்ட சென்னை,கடலூர் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் மு .முகமது சாதிக் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்.


கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் அன்பான கவனத்திற்கு
............................................................................................................................................
நம் கல்லூரியில் பயின்று வெளிநாட்டில் பணிபுரியும் முன்னாள் மாணவமாணவியர்களும் இந்த நிவாரணப்பணியில் பங்குபெறலாம். திருநெல்வேலி ,ரஹ்மத்நகரில் உள்ள கனராவங்கியில் உள்ள கல்லூரிக்கான வங்கிக்கணக்கு எண்: 2998101006875, IFSC CODE: CNRB OOO2998, CANARA BANK, RAHMATH NAGAR என்ற கணக்கில் செலுத்தியபின் முதல்வர் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்தினால் அந்தத் தொகைக்கும் நிவாரணப்பொருட்கள் வாங்கி சென்னை மற்றும் கடலூருக்கு அனுப்பஏதுவாகும்.
                                   முனைவர் ச.மகாதேவன்,
                                    தமிழ்த்துறைத்தலைவர்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்