பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார் நூல்கள் மலேசியாவில் வெளியீடு



முனைவர் ச.மகாதேவன், திருநெல்வேலியில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.

 வண்ணதாசன், இணையத்தமிழ் என்ற இருநூல்களை எழுதியுள்ளார். தமிழ்இணையப் பல்கலைக்கழகத்தில் அவர் எழுதிய சிற்றிலக்கியம், புராணம்,காப்பியயங்கள் தொடர்பான ஆறுபாடங்கள் மின்நூல்களாகப் பாடத்திட்டத்தில் உள்ளன.

 சௌந்தர மகாதேவன் என்கிற பெயரில் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணையத்தில் இடம்பெற்றுள்ளன.

 மலேசியாவில் கடந்த சனவரி 29- பிப்ரவரி 1, 2015 வரை நடைபெற்ற ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டில் சென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிடப்பட்ட பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும் இரு நூல்களை அவர் எழுதியுள்ளார்.

இந்த நூல்களில் வைணவ பக்திஇயக்கத்தின் முன்னோடிகளாகத் திகழும் ஆழ்வார்களில் முதல் இருஆழ்வார்கள் குறித்து எழுதியுள்ளார்.

ஆழ்வார்களின் வரலாறுகளில் கருடவாகனப்பண்டிதர் இயற்றிய திவ்ய சூரிசரிதமும், அதன்பின் பெருமாள் ஜீயர் மணிப்பிரவாள நடையில் எழுதிய ஆறாயிரப்படி குரு பரம்பரையும் முதன்மையானவை. 

வைணவ ஆசாரியரான நாதமுனிகள் பன்னிருஆழ்வார்களின் பாசுரங்களைத் தொகுத்து நாலாயிர திவ்யப்பிரபந்தம் எனும் அற்புதஇலக்கியத்தைத் தந்தார். 

தமிழகத்தில் வைணவம் வேரூன்றிய சூழல், காஞ்சி மாநகரின் திருவெகா திருநகரில் பொய்கையில் அவதரித்த பொய்கையாழ்வார் வரலாறு, மாமல்லையில்  பூதத்தாழ்வார் தோன்றிய வரலாறு, திருக்கோவலூரில் முதல் மூன்று ஆழ்வார்கள் சந்திப்பு, பொய்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த முதல்திவ்யதேசம், முதல் இரு ஆழ்வார்கள் பாடிப்பரவிய திவ்ய திருத்தலங்கள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தொடக்கம், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் காலம், நூல் தோன்றிய வரலாற்றுப் பின்னணி, அந்தாதி எனும் இலக்கியவகைமையை முதல்,இருஆழ்வார்களும் தேர்ந்தெடுத்த காரணம்,முதல்,இரண்டாம் திருவந்தாதிகளின் பாடல் விளக்கம், நூலின் பதிப்புவரலாறு ஆகியவற்றை பெரியவாச்சான் பிள்ளை உரை,அண்ணங்கராசாரியார் உரை ஆகியோரின் உரைகளோடு ஒப்புநோக்கி பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் திருவந்தாதிகளுக்கு உரையும் நூலைப்பற்றிய ஆய்வுரையும் எழுதியுள்ளார்.

  பொய்கையாழ்வார்,
  கலைஞன் பதிப்பகம்,

19, கண்ணதாசன் சாலை,தியாகராய நகர், சென்னை-600 017,விலை:120


  பூதத்தாழ்வார்
  கலைஞன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை,தியாகராய நகர், சென்னை-600 017,விலை:108

நூலாசிரியர் முகவரி

முனைவர் ச.மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி- 627 011
9952140275.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்