ஜெர்மன் நாட்டின் தமிழ்மரபு அறக்கட்டளையும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் தமிழ்மரபுகளை ஆவணப்படுத்துதல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கம்




ஜெர்மன் நாட்டிலிருக்கும் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாசிணி பங்கேற்றுச் சிறப்புரை

     ஆய்வுக்கட்டுரைகள் அனுப்பக் கடைசிநாள் 10.12.2016
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும், ஜெர்மன் தமிழ்மரபு அறக்கட்டளையும் இணைந்து வரும் 27.12.2016 அன்று தமிழ்மரபுகளை ஆவணப்படுத்துதல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கினைக் கல்லூரி உரையரங்கில் நடத்தஉள்ளன.

ஜெர்மன் நாட்டிலிருக்கும் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாசிணி பங்கேற்றுச் சிறப்புரை

கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்துரை வழங்க, கல்லூரித் தாளாளர் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி கருத்தரங்கினைத் தொடங்கிவைத்து “மரபுத்தமிழ்” எனும் ஆய்வுக்கோவையை வெளியிட, அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டு ஜெர்மன் நாட்டிலிருக்கும் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாசிணி “தமிழ்மரபுகளை ஆவணப்படுத்தவேண்டிய தேவைகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

2001 இல் மலேசியாவில் தொடங்கப்பட்ட தமிழ்மரபு அறக்கட்டளை மலேசியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி,இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் கிளைகளைப் பரப்பி தமிழ்மரபுகளை இணையதளத்தில் ஆவணப்படுத்திவருகிறது. பல உலகநாடுகளுக்குப் பயணித்து வரும் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாசிணி லண்டன் அருங்காட்சியகம் முதல் ஜெர்மானிய பல்கலைக்கழகம் உட்படப்பல இடங்களில் ஆய்வுகள் நிகழ்த்தியவர்.

தமிழ்மரபுகளை ஆவணப்படுத்தும் தளம்

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரவிக்கிடக்கும் தமிழ் மரபுகளை குறிப்பாக தமிழின் அரிய ஓலைச்சுவடிகளை, கல்வெட்டுகளை, அரிய ஓவியங்களை தமிழ்மரபு அறக்கட்டளை அதன் இணையதளமான www.tamilheritage.org தளத்தில் யாவற்றையும் எண்மவடிவில் ஆவணப்படுத்தியுள்ளது. உலக நூலகங்களுக்கெல்லாம் தேடிச்சென்று நகலெடுத்த நூறுஆண்டுகளுக்கு முந்தைய அரிய தமிழ்நூல்களையெல்லாம் அத்தளத்தின் பிரித்தானிய நூற்சேகரத்தில் முனைவர் க. சுபாசிணி ஆவணப்படுத்தியுள்ளார்.

ஆய்வுக்கட்டுரைகள் வழங்கலாம்

இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் ஆய்வுமாணவர்கள் கலந்துகொண்டு பின்வரும் பொருளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கலாம். தமிழ்மரபுகளை ஆவணப்படுத்தும்போது ஆய்வாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், தமிழர் மருத்துவம், தமிழரின் அறிவியல் சிந்தனைகள், தமிழர் கட்டடக் கலை, தமிழர் ஓவியமரபு, தமிழர் விளையாட்டு, தமிழர்கல்வி முறை, தமிழ்மரபுகளை ஆவணப்படுத்துதலில் பயன்படுத்தவேண்டிய நவீன தொழில்நுட்ப அணுகுமுறைகள், தமிழ்ப் பண்பாட்டினை இணையதளங்கள் மூலம் எவ்வாறு ஆவணப்படுத்துதல், தமிழ்ப் படைப்பிலக்கியங்களில் இடம்பெறும் வாட்டார வழக்குச் சொற்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக்கதைகள், பழமொழிகள், நூறுஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அரியதமிழ் நூல்கள் குறித்த பதிவுகள், அரிய கல்வெட்டுகள், அரிய செப்பேடுகள் குறித்த பதிவுகள், அரிய அருங்காட்சியகங்கள் குறித்த பதிவுகள், ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாய்வுகள் குறித்த பதிவுகள், தமிழில் கலைச்சொற்கள் உருவாக்குதல், எதிர்காலத்தமிழ், இஸ்லாமியர் வாழ்வியல், இஸ்லாமியர் பேச்சுவழக்கு, இஸ்லாமிய நாட்டுப்புற வழக்காறுகள் போன்ற பொருண்மைகளில் ஆய்வுநெறிமுறைப்படி ஆய்வாளர்கள் ஐந்துபக்க அளவில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதி அனுப்பிப் பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்கலாம்.

தொடர்புக்கு

கருத்தரங்க நாளன்று பன்னாட்டு நூல் குறியீட்டு எண்ணுடன் வெளியிடப்படும் “மரபுத்தமிழ்” ஆய்வுக்கோவையில் ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படும். ஆய்வுக் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து 10.12.2016 நாளுக்குள், ச.மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011 எனும் முகவரிக்கோ அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு 9952140275 எனும் செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் ச.மகாதேவன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
                                              ச.மகாதேவன்



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்