மாணவர்களின் கவிதைகளை நூலாக வெளியிடும் கல்லூரி அ.அருள் தாசன்-----தி இந்து




மாணவர்களின் கவிதை தொகுப்பு நூல்



திருநெல்வேலி மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் எழுதிய கவிதைகளை நூலாக வெளியிட்டு வருகிறது பாளையங்கோட்டை சதக்கத் துல்லா அப்பா கல்லூரி.
இக்கல்லூரியின் மாணவர் பேரவை விழா கலை இலக்கிய விழாவாக ஆண்டுதோறும் கொண்டா டப்படுகிறது. 

மாணவர் களின் பேச்சாற்றலுக்காக ஒவ்வோர் ஆண்டும் தமிழ்த்துறையின் சீதக்காதி தமிழ்ப் பேரவை, மாண வர் பேரவை ஆகியவை, திருநெல் வேலி அகில இந்திய வானொலி யோடு இணைந்து, 10 ஆண்டு களுக்கும் மேலாக இளையோர் மேம்பாட்டு பொங்கல் பட்டி மன்றத்தை நடத்தி வரு கின்றன.


கவிதைத் தொகுப்பு

மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக நூற் றுக்கும் மேற்பட்ட மாணவ, மாண வியர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறது இக்கல்லூரியின் தமிழ்த்துறை.



அந்தந்த ஆண்டுக்கான கவிதைத் தொகுப்பின் தலைப்பை கல்லூரி முதல்வர் மு.முகம்மது சாதிக் தெரிவிக்க, பலநூறு மாணவ, மாணவியர் கவி தைகளை எழுதி தமிழ்த்துறை பேராசிரியர்களிடம் தருகிறார்கள்.
அதை அவர்கள் பிழை திருத்தி செம்மைப்படுத்துகிறார்கள். பேராசிரியர்கள் அ.மு. அயூப்கான், அ.சே.சேக்சிந்தா ஆகியோர் நூலை செம்மையாக்குகின்றனர். அந்த வகையில் கடந்த 2014-ல் ஆறாம் விரல்’, 2015-ல் மனத்துளி’, 2016-ல் கானல் மீன்கள்என்று இதுவரை 3 கவிதைப் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன.



இதுகுறித்து இக்கல்லூரி முதல்வர் கூறும்போது, “மாண வர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சியை ஆண்டுதோறும் செய் கிறோம்.



 2016-17-ம் ஆண்டுக்கு `கவிப்புறாஎன்ற தலைப்பை தேர்வு செய்துள்ளோம். இக்கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு கல்விக்குழு (நாக்) தர மதிப் பீட்டுக்காகத் தமிழ்த் துறையைப் பார்வையிட்ட போது, மாணவர்களின் படைப்பாற்றலை தூண்டும் இந்த முயற்சிகளைப் பெரிதும் பாராட்டியிருக்கிறதுஎன்றார்.

கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ச.மகாதேவன் கூறும்போது, “கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னரே அப்போதைய மாணவர் பேரவைத் தலைவர் ஞானியார், மாணவர் ராஜா இருவரும் இணைந்து எழுதிய கவிதைகளை தொகுத்து, `பானிபட் இதயங் கள்என்ற தலைப்பிட்டு நூலாக்கினோம். அதன்பின் மாணவர் சுந்தர்ராஜ் எழுதிய கவிதைகளை தொகுத்து `கனவுச் சிற்பங்கள்என 2000-ல் வெளியிட்டோம்.

2001-ல் வணிகவியல் மாணவர் திருமலை பிரகாஷ் எழுதிய `போதிமரம்என்ற தொகுப்பை தமிழ்த் துறை சார்பில் வெளியிட்டோம். அதற்கடுத்த ஆண்டு `இன்னொரு தாஜ்மகால்என்ற தலைப்பில் மாண வர்களின் கவிதைகளை நூலாக வெளியிட்டோம்.








இக்கல்லூரியின் தமிழ்த் துறையை அடையா ளம் காட்டிய ஞானியார் 17 ஆண்டுகளுக்குப் பின் கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார், கல்லூரி முன்னாள் மாணவரான அவரது கவிதையை தமிழ் பாடத் திட்டத்தில் சேர்த்துள்ளோம்என்றார் அவர்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்