தாமிர பரணி சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி



மாறிக்கொண்டிருக்கின்றன
யாவும் .
மார்க்கெட் முதல் மயானம் வரை .
நண்பகல் நேரம் தபால் எதிர்பார்த்துக்
காத்திருக்கும் கிச்சா தாத்தா
மின்னஞ்சலுக்கு மாறி
ஓர் மாமாங்கம் ஆயிற்று  .
மோர்த் துளிவிட்டுச்
ராசம்மா அக்கா
மோர்க் கணக்கைச்   சுவற்றில்
எழுதி வைத்த இடத்தில் இன்று
ஹட்சன் ஸ்டிக்கர்கள் .
சத்திரம் நிறுவிச் சாப்பாடு போட்ட
நெல்லையப்பர் நெடுஞ்சாலையில்
நியான் மின் பலகைகளுடன்
சென்னை நகைக் கடைகள்
இன்னும் மாறாதிருப்பது

அழுக்குகளை அள்ளிவீசினாலும்
எல்லோர்க்கும் பொதுவாய்
அன்போடு நகர்கிற
தாமிர பரணி மட்டும்தான் .


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்