பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் டி.வி.எஸ்.நிறுவனத்தின் சார்பில் வளாக நேர்காணல்



பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் டி.வி.எஸ்.நிறுவனத்தின் சார்பில் வளாக நேர்காணல் நடைபெறுவதை முன்னிட்டு 6.10.2015 அன்று காலை 10 மணிக்கு திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று கல்லூரி முதல்வர்  முனைவர் மு.முகமது சாதிக், தெரிவித்ததாவது.. உடன் வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சித்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.செய்யது முகமது மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் ஆகியோர் உள்ளனர்.


பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சித்துறை டி.வி.எஸ்.குழும நிறுவனமும் இணைந்து வங்கி நிறுவனத்திற்காக விற்பனை அலுவலர் எனும் பணியிடத்திற்காக அக்டோபர் 8 அன்று காலை 10 மணிக்கு  வளாக நேர்காணல் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராமநாதபுரம்,தூத்துக்குடி,விருதுநகர்,மதுரை மாவட்டங்களைச் சார்ந்த பி.ஏ.,பி.எஸ்.சி.,பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களிலும் பட்டம் பெற்ற மாணவ மாணவியர் இந்த வளாக நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குபெறலாம்.வயது உச்சவரம்பு 26 

இரண்டாவது ஆண்டாக பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி டி.வி.எஸ்.நிறுவனத்துடன் இணைந்து இந்த வளாக நேர்காணல் நிகழ்ச்சியைத் திருநெல்வேலி மாவட்ட இளையோருக்காக நடத்துகிறது.
கலை அறிவியல் கல்லூரிகளில் பயின்ற மாணவ மாணவியருக்காக நடத்தப்படும் இந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு எந்த பதிவுக் கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை. தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள மாணவ மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ1.6 லட்சம் முதல் ரூ1.85 லட்சம் வரை ஊதியம் தரப்படும்.

இந்த வளாக நேர்காணல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக், வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சித்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.செய்யது முகமது, டி.வி.எஸ்.நிறுவனத்தைச் சார்ந்த கே.அருண்குமார்,ஜார்ஜ் ஆகியோர் சிறப்பாகச் செய்துவருகின்றனர்.இந்த வளாகநேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் டி.வி.எஸ்.நிறுவனத்தைச் சார்ந்த கே.அருண்குமார் அவர்களை செல்பேசியில் தொடர்புகொண்டு( 09789077352) பெயர்ப்பதிவு செய்துகொள்ளலாம்.





Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்