பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்குத் தேசியத் தர மதிப்பீட்டுக் கல்விக்குழு (நாக்) வருகை



பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்குத் தேசியத்
தர மதிப்பீட்டுக் கல்விக்குழு (நாக்) வருகை

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக்குத் தேசியத் தர மதிப்பீட்டுக்குழு (நாக்) நவம்பர் 3,4,5 ஆகிய மூன்று நாட்கள் மறுதரமதிப்பீட்டிற்காக வருகை தர உள்ளது.

                2003 ஆம் ஆண்டு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, தேசியத் தர மதிப்பீட்டுக்குழுவின் பிூதரமதிப்பீட்டைப் பெற்றது.

 அதன் பின்னர், 2009 ஆம் ஆண்டு இரண்டாம் சுற்றில் இக்கல்லூரிக்கு நாக்குழு 3.11 எனும் மதிப்பெண்ணுடன் தர மதிப்பீட்டினை வழங்கியது. 

                2015 ஆம் ஆண்டு, வருகின்ற நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் மூன்றாம் சுற்றுக்கான தர மறுமதிப்பீட்டினை நடத்த உள்ளது.

                அந்தக் குழு, கல்லூரியின் பாடத்திட்டம், கற்பித்தல் கற்றல் மற்றும் மதிப்பிடுதல், ஆய்வு மற்றும் தகவுரைத்தல், கல்விசார் விரிவாக்கப்பணிகள், கல்லூரியின் உள்கட்டமைப்பு மற்றும் கற்றலுக்கான வசதிகள், மாணவர்நலன் மற்றும் முன்னேற்றம், ஆளுகை, தலைமைப் பண்பு, நிர்வாகம், கல்விசார் புதுமைகளும் சிறந்த நடைமுறைகளும் எனும் ஏழு அளவீடுகளின் அடிப்படையில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியை ஆய்வு செய்கிறது

இதனடிப்படையில் முதல்வர் அலுவலகம், நூலகம், விடுதி, உணவகம், அலுவலகம், அனைத்துத் துறைகள், தேர்வாணையர் அலுவலகம், விளையாட்டரங்கம், ஆய்வகங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு மதிப்பீடு செய்கிறது.

                ஆட்சிக்குழுவினர், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் ஆய்வில் பதிவு செய்கிறது. 

                தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி இயக்கம், இளையோர் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், இளைஞர் நலத்துறை, ‘சதக்கத்கிராம மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் ஐந்தாண்டுப் பங்களிப்பையும் மதிப்பிடுகிறது.

இவற்றின் அடிப்படையில் தேசியத்தர மதிப்பீட்டுக் குழு மதிப்பீட்டினை வழங்க உள்ளது.

                இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக், கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு உறுதிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. ரபி அகமது, துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். முஹம்மது ஹனீப், ஆலோசகர் முனைவர் ஏ. அஷ்ரப் அலி, அரசுதவி பெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் முனைவர் யு. அப்துல் காதர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்