பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள்விழா இளைஞர் எழுச்சிநாள் போட்டிகளின் பரிசளிப்பு விழா




தமிழக உயர்கல்வித்துறையின் சார்பில் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள் அக்டோபர் -15 அன்று இளைஞர் எழுச்சிநாளாகக் கொண்டாடப்படுகிறது.

 திருநெல்வேலி மண்டலம் முழுக்க உள்ள அரசு உதவிபெறும்,சுயநிதிக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள் இளைஞர் எழுச்சிநாள் கட்டுரை,பேச்சுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்தவும் நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்களை ஒருங்கிணைத்து இளைஞர் எழுச்சிநாள் பேரணிகளை நடத்தவும் திருநெல்வேலி மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் ஆணை பிறப்பித்ததன் அடிபடையில் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடத்தப்பட்டது.

இளைஞர் எழுச்சிநாள் போட்டிகள் 

ஒவ்வொரு கலை அறிவியல் கல்லூரியிலும் அக்டோபர் -12 காலை 11 மணிக்கு இளைஞர் எழுச்சிநாள் முதல் சுற்றுப்போட்டிகளாக பேச்சு,கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. 

ஒவ்வொரு கல்லூரியிலும் வெற்றிபெற்று முதலிடம் பெறும் மாணவ மாணவியர் மாவட்ட அளவில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 13.10.2015 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சௌ.மகாதேவன்  பணிபுரிந்தார். போட்டியின் நடுவர்களாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் சேக்சிந்தா, அனுசியா, மாலிக், சாதிக் அலி, குமார்,விஜயலட்சுமி ஆகியோர் செயல்பட்டனர். 

இறுதிப்போட்டி

அறிவியல் முன்னேற்றத்தில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். என்ற தலைப்பிலும் மாணவர்களை ஊக்குவித்தலில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டன. 

பேச்சுப்போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 கல்லூரிகளைச் சார்ந்த மாணவ மாணவியரும் கட்டுரைப்போட்டியில் 12 கல்லூரிகளைச் சார்ந்த மாணவமாணவிரும் பங்கேற்றனர். போட்டிகளை திருநெல்வேலி மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் முனைவர் ரெ.பாண்டியன் தலைமையேற்றுத் தொடங்கிவைத்தார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் போட்டிகளைத் தலைமையேற்று நடத்தினார். 

கட்டுரைப் போட்டியில் சாராள் தக்கர் கல்லூரி மாணவி மாவட்ட முதலிடம்

கட்டுரைப்போட்டியில் திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி மாணவி நா. பாலாமணி முதல்பரிசினையும், தூய இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மாணவி மு.எஸ்தர் ஷைனி பிரியா இரண்டாம் பரிசினையும், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவி எஸ்.டி.ஜெபா மூன்றாம் பரிசினையும் வென்றனர்.

பேச்சுப்போட்டியில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர் மாவட்ட முதலிடம்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர் ம.கலையரசன் முதல்பரிசினையும், சாராள் தக்கர் கல்லூரி மாணவி ம.பௌஷி இரண்டாம் பரிசினையும், தூய இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மாணவி வி.பிரசில்லா மூன்றாம் பரிசினையும் பெற்றனர். 

பரிசளிப்பு விழா
மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியில்  முதலிடம் பெற்ற சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர் ம.கலையரசனுக்கும் கட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்ற சாராள் தக்கர் கல்லூரி மாணவி நா. பாலாமணிக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 15.10.2015 அன்று மாலை 4 மணிக்கு உயர்கல்வித்துறை நடத்திய இளைஞர் எழுச்சிநாள் விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பரிசுகளை வழங்கிப் பாரட்டினார்.

மாநிலங்களவை உறுப்பினர் முத்துகருப்பன் பங்கேற்பு

திருநெல்வேலி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தின் சார்பில் 15.10.2015 அன்று மாலை 4 மணிக்கு திருநெல்வேலி  சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்ற பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சௌ.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.

 விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் முத்துகருப்பன் கலந்துகொண்டு மாவட்ட அளவில் சாதனை படைத்த சாதனை மாணவர்களுக்கு சுழற்கேடயங்களையும் பரிசுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக்,அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ.அப்துல் காதர்,பாளை மண்டலச் சேர்மன் எம்.சி.ராஜன், இஸ்லாமிய இயல் துறைப்பேராசிரியர் இலியாஸ் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் சாதிக் அலி நன்றி  கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறை சிறப்பாகச் செய்திருந்தது.

                                முனைவர் சௌ.மகாதேவன்,
                 போட்டி ஒருங்கிணைப்பாளர் & தமிழ்த்துறைத்தலைவர்




 




படத்தில்; பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் உயர்கல்வித்துறை நடத்திய இளைஞர் எழுச்சிதினப் பரிசளிப்பு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் முத்துகருப்பன் சிறப்புவிருந்தினராக வருகைதந்து மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கியபின் எடுத்தபடம். அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சௌ.மகாதேவன், அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ.அப்துல் காதர்,பாளை மண்டலச் சேர்மன் எம்.சி.ராஜன் ஆகியோர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்