திருநெல்வேலியில் “மேலும் இலக்கிய அமைப்பு” நடத்தும் புதுமைப்பித்தன் நினைவுநாள் கருத்தரங்கு




தமிழ்ச் சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் நினைவு நாளன்று அவர் படைப்பிலக்கியங்கள் குறித்த கருத்தரங்கை “மேலும்” இலக்கிய அமைப்பு தொடர்ந்து  பல ஆண்டுகளாக நடத்திவருகிறது. இவ்வாண்டு புதுமைப்பித்தன் நினைவுநாளன்று திருநெல்வேலியில் நடைபெறஉள்ள இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், தமிழ்ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். 
 

இக்கருத்தரங்கு குறித்து மேலும் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு, தலைவர் பேராசிரியர் கட்டளை கைலாசம், செயலாளர் பேராசிரியர் ச.மகாதேவன் ஆகியோர் தெரிவித்துள்ள அறிக்கையில் உள்ளதாவது.. தமிழ்ச் சிறுகதையின் தடத்தை மாற்றிய புதுமைப்பித்தன் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்து பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து திருநெல்வேலி மதுரை திரவியம் இந்துக் கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்றவர். 

 
திருநெல்வேலியையும் சென்னையையும் களமாகக் கொண்ட புகழ்பெற்ற சிறுகதைகள் எழுதியவர். மொழிபெயர்ப்பாளராக, கவிஞராக, இதழாசிரியராக உலக இலக்கியங்களை உள்வாங்கிப் பல சோதனைமுயற்சிகளைத் தமிழ்ப்படைப்புலகில் செய்த புதுமைப்பித்தன் ஜூன் 30,1948 இல் மறைந்தார்.அவர் நினைவுநாளன்று அவர் சிறுகதைகளின் தனித்துவத்தை ஆராயும் நோக்கில் திருநெல்வேலி “மேலும் இலக்கிய அமைப்பு” புதுமைப்பித்தன் சிறுகதைகள் குறித்த ஆய்வுக் கருத்தரங்கை பாளையங்கோட்டை தெற்குக்கடைவீதியிலுள்ள சைவசபையில் புதுமைப்பித்தன் நினைவுதினமான 30.6.2016 வியாழன் அன்று மாலை 6 மணிக்கு நடத்தஉள்ளது.


சுரண்டை அரசு கலைக் கல்லூரி தமிழ்உதவிப்பேராசிரியர் சி.ரமேஷ் வரவேற்றுப் பேசுகிறார். நவீனத்துவமும் புதுமைப்பித்தன் சிறுகதைகளும் எனும் தலைப்பில் பேராசிரியர் சிவசுவும், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் கதையில் புதுமைப்பித்தனின் அங்கதம் எனும் தலைப்பில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவனும், புதுமைப்பித்தனின் களமும் கதையும் எனும் தலைப்பில் மதிதா இந்துக்கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசமும், என்னைப் பாதித்த புதுமைப்பித்தன் கதை எனும் தலைப்பில் திருநெல்வேலி வானொலியின் நிகழ்ச்சிப்பொறுப்பாளர் ஜான் பிரதாப் குமாரும் சிறப்புரையாற்ற உள்ளனர்.


விழாவில் திருவாரூர் மத்தியப்பல்கலைக்கழக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் நிதாஎழிலரசியின் “ ஆதவனின் நிறத்தை எட்டிப் பிடித்தேன்” எனும் கவிதைத்தொகுப்பை பேராசிரியர் சிவசு வெளியிட ஜான் பிரதாப் குமார் அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.




 கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் மேலும் சிவசு, 9, ரயில்வே ஸ்டேஷன் சாலை, பாளையங்கோட்டை எனும் முகவரிக்கோ அல்லது மேலும் சிவசுவின் செல்பேசிஎண்ணான 9443717804  தொடர்புகொண்டு பதிவுசெய்துகொள்ளலாம். பங்கேற்புக் கட்டணம் ஏதுமில்லை. கருத்தரங்க ஏற்பாடுகளை மேலும் இலக்கிய அமைப்பு செய்துவருகிறது.
                                   முனைவர் சௌந்தர மகாதேவன்,      செயலாளர், மேலும் இலக்கிய அமைப்பு,திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்