மதுரை பாத்திமா கல்லூரியில் இணையத்தமிழ் பயிலரங்கு



 இணையப் பயிலரங்கில் இலக்கியமாணவியர்
.....................................................................................................
சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

தமிழ் இலக்கிய மாணவியருக்கு இணையம் குறித்த ஒருநாள் பயிலரங்கு நடத்த மதுரை பாத்திமா கல்லூரிக்குக் கடந்த திங்கள்கிழமை (12.9.2016).
எழுத்தாற்றல் மிக்க மாணவியர் கூட்டம்.

இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவியர் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்வரை நானூறுமாணவியர் பங்கேற்றனர்.தேடுபொறிகள்,புகழ்பெற்ற தமிழ்இணையதளங்கள்,சமூகஊடகங்களில் தமிழ்,செய்தித்தாள்களின் இணையப்பதிப்புகள்,எழுத்துரு தொடர்பான சிக்கல்கள், ஒருங்குறிப்பயன்பாடு, வலைப்பூ உருவாக்கம்,படைப்புகளைப் பதிவேற்றம் செய்தல், தமிழ்ச்சுவடிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்தல், மின்நூல்கள் தயாரித்தல்,தமிழ்மரபுகளை இணையத்தில் ஆவணப்படுத்துதல் போன்றவற்றை எளிமைப்படுத்தி மாணவியருக்கு விளக்கினேன்
.
தினமலர் ஆசிரியர் திரு.ரமேஷ்குமார் என் உரையைச் செய்தியாளர் திரு.காளிஸ் அவர்களை அனுப்பிப் பதிவுசெய்து தினமலர் நாளிதழிலும், தினமலர் இணையதளத்திலும் வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார்.

தமிழ்இலக்கிய மாணவியர் இணையத் தமிழை நான்காம் தமிழாய் ஏற்று உற்சாகமுடன் தமிழ்இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டது நிறைவளித்தது.

அறுபதாண்டு பழமையான பாத்திமா கல்லூரித் தமிழ்த்துறை இந்த ஆண்டின் முத்தமிழ் விழாவில் இணையத்தமிழுக்கு முதலிடம் கொடுத்துப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்தியதும் பங்கேற்றுப் பேசியதும் மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது.
கல்லூரித்தமிழ்த்துறைக்கும் திரு.ஜிவிஆர் அவர்களுக்கும் நன்றி.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்