உலகசாதனை நூல் வெளியீட்டுவிழாவில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் எழுதிய நூல் வெளியீடு




மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து 2016 செப்டம்பர் 12,13 ஆகிய நாட்களில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரேநாளில் 430 நூல்கள் வெளியிடும் உலகசாதனை நிகழ்ச்சியை நடத்தின.



அதில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் எழுதிய  “இறையருட்கவிமணி கா.அப்துல்கபூர்” எனும் நூல் உள்ளிட்ட  425 நூல்களை தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட மலேசியாவின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ சரவணன் அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.



மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில்   2015 ஆம் ஆண்டு சனவரி 29  பெப்ரவரி 1 வரை நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ்மாநாட்டில் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து பேராசிரியர் ச.மகாதேவன் எழுதிய பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய நூல்களை டத்தோ சாமிவேலுவைக் கொண்டுவெளியிட்டுச் சிறப்புச் செய்தது.



 கடந்தஆண்டு (செப்டம்பர் 2015) பேராசிரியர் ச.மகாதேவன் எழுதிய “வண்ணதாசன்” என்கிற நூல் உலகசாதனை நிகழ்வாய் ஒரேநாளில் வெளியிடப்பட்ட 351 நூல்களுள் ஒரு நூலாய் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையால் வெளியிடப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாகப் புகழ்பெற்ற இஸ்லாமிய இலக்கிய முன்னோடியாகத் திகழ்ந்த இறையருட்கவிமணி பேராசிரியர் அப்துல் கபூர் அவர்களின் கவிதைகள் குறித்த திறனாய்வு நூலை பேராசிரியர் ச.மகாதேவன் எழுதினார்.அந்நூல 2016 செப்டம்பர் 12 அன்று காலை 10.15 மணிக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வெளியிடப்பட்டது.



படத்தில்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை நடத்திய உலகசாதனை நூல் வெளியீட்டுவிழாவில் பங்கேற்று, நூலாசிரியர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் ச.மகாதேவனுக்கு அப் பல்கலைக்கழகப்பதிவாளர் பேராசிரியர் கே.ஆறுமுகம் நற்சான்றிதழ் வழங்கப்பாராட்டுகிறார்.









Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்