பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் (NEET) தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு


                நாடெங்குமுள்ள மருத்துவக் கல்லூரிகளிலுள்ள 52,715 மருத்துவப் படிப்புக்கான இடங்களில், 15 சதவீத இடங்களை மத்திய அரசின் ஒதுக்கீட்டிற்குத் தந்துவிட்டு ஏனைய 85 சதவீத இடங்களைக் கலந்தாய்வு நடத்தி அந்தந்த மாநில அரசுகளே நிரப்பி வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் பயில இந்தியா முழுமைக்குமான ஒரே தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
                மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வினை வரும் மே மாதம் 7ஆம் தேதி ஞாயிறு அன்று இந்தியா முழுக்க நடத்தவுள்ளது. அதன் முடிவுகள் ஜூன் 8, 2017 அன்று இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன. அதற்கான விண்ணப்பம் இணையதளத்தில் உள்ளிடப்பட்டு 31.01.2017 முதல் 01.03.2017 வரை விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இறுதி நாளிலிருந்து ஒரு வார காலம் அவகாசம் தரப்பட்டது.

                ‘நீட்எனும் அகில இந்திய மருத்துவக் கல்விக்கான தேசியத் தகுதி காண் நுழைவுத் தேர்வினைத் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், வங்காளம், மராத்தி, குஜராத்தி, ஹிந்தி, அஸ்ஸாமி எனும் 8 மொழிகளில் நடத்தவுள்ளது.

                இதுவரைப் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கல்விக்கான கவுன்சிலில் சென்ற மாணவர்கள் இந்த ஆண்டு முதல் நீட்தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலவச அறிமுக வகுப்பு
                ‘நீட்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், எப்படி அத்தேர்வை எதிர்கொள்வது? என்ற பொருளில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் சதக்கத்எனும் போட்டித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுப் பயிற்சியகத்தின் சார்பில் 28.03.2017 செவ்வாய்க்கிழமை கல்லூரி உரையரங்கில் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை இலவச அறிமுக வகுப்பு நடக்கிறது.

சதக்கத்பயிற்சியகம்

                சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வணிகவியல் பயிலும் மாணவ மாணவியர் சி.ஏ. தேர்வுக்குத் தயாராகும் வகையில் அதற்கான பயிற்சி வகுப்புகள் சதக்கத்போட்டித்தேர்வுப் பயிற்சியக இயக்குநர் பேராசிரியர் ஜெயகுமார் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சியகம் மூலம் சி.ஏ. தேர்வுக்கான இன்டர் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

நீட்பயிற்சி தொடக்கம்

                மாநிலக் கல்வி முறையில் பயிலும் மாணவர்கள், தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வில் எளிதாகப் பங்குபெற வேண்டும் என்பதற்காக இவ்வாண்டு முதல் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் சதக்கத்பயிற்சியகத்தின் சார்பில் பல ஆண்டுகள் அனுபவம்பெற்ற கல்லூரிப் பேராசிரியர்களைக் கொண்டு முதல் ஒருமாத காலம் பயிற்சி வகுப்புகள் தினமும் நடத்தப்படுகின்றன. 01.04.2017 சனிக்கிழமை பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம் கல்லூரி இணையதளத்தில்(sadakh.ac.in)  பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

                இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கென்று பாடத்திற்கு மூன்று பேராசிரியர்கள் வீதம் 12 பேராசிரியர்களைக் கொண்டு தினமும் ஐந்து மணி நேரம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

                2 வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடம் படித்த மாநிலக் கல்விமுறை மற்றும் மத்தியக் கல்விமுறை சார்ந்த நீட்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியர் அனைவரும் 28.03.2017 அன்று நடைபெறவுள்ள நீட்தேர்வுக்கான இலவசப் பயிற்சி அறிமுக வகுப்பில் பங்குபெறலாம்.

                அதற்கு அடுத்த நாள் முதல் பயிற்சி வகுப்பில் பயில வருவோர் ரூ.2,500ஃ- செலுத்திப் பெயர்ப்பதிவு செய்துகொண்டு பயிற்சி வகுப்புகளில் பங்குபெறலாம்.

                ஏழை எளிய மாணவர்களும் இத்தேர்வை முறையான தயாரிப்போடு எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் இக்குறைந்த கட்டணத்தில், இலாப நோக்கின்றி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, “சதக்கத்போட்டித்தேர்வுப் பயிற்சியகம் இப்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. தினமும் ஐந்து மணி நேரம் வகுப்புகள் நடைபெறுவதோடு, பேராசிரியர்கள் தயாரித்து நடத்தும் மாதிரித் தேர்வும் வாரா வாரம் மாணவர்களுக்கு நடத்தப்படும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த நீட்தேர்வு எழுதும் மாணவ மாணவியர் பயன்பெறுமாறு கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக், ‘சதக்கத்அகாடெமி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயகுமார், ‘நீட்தேர்வுப் பயிற்சியின் நெறியாளர் பேரா. செய்யது முகமது, தமிழ்த்துறைத் தலைவர் பேரா. ச. மகாதேவன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இலவசப் பயிற்சி முகாமில் பங்கேற்க சதக்கத் பயிறிசியகத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. ஜெயக்குமார் அவர்களை 9003777538 என்ற செல்பேசி எண்ணிலும், பேரா. செய்யது முகமது அவர்களை 9894388030 என்ற செல்பேசி எண்ணிலும் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம்.

                இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்குப் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றக் கல்லூரிப் பேராசிரியர்கள் தினமும் வகுப்பெடுக்கிறார்கள்.

                தினமும் ஐந்து மணி நேர வகுப்புகள் நடைபெறும். சிறப்பான வினாத்தாள்கள் பேராசிரியர்களால் தயார் செய்யப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, விடைத்தாள்கள் உடனுக்குடன் திருத்தி மதிப்பீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.




                2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடம் எடுத்த நீட் தேர்வுக்கு விண்ணபித்த அனைத்து மாணவ மாணவியரும் பங்கு பெறலாம்.


முதல்வர்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்