சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நெல்லையில் ஞாயிறு அன்று பாராட்டுவிழா


“ஒரு சிறுஇசை” எனும் சிறுகதைத்தொகுப்புகாக 2016 ஆம் ஆண்டுக்கான  சாகித்ய அகாடெமி விருதினைப் பெற்ற திருநெல்வேலி எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வரும் ஞாயிறு ( 19.3.2017) அன்று மாலை 5.30 மணிக்கு திருநெல்வேலி ஆர்டிஓ அலுவலகம் அருகேயுள்ள பாலாஜி டவர்ஸ் ஸ்ரீவாரி அரங்கில் பாராட்டுவிழா நடைபெறுகிறது.

கரிசல்குயில் கிருஷ்ணசாமி பாடல்களுடன் தொடங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் வரவேற்றுப் பேசுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் கவிஞர் அ.இலட்சுமிகாந்தன் விழாவுத் தலைமை தாங்குகிறார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியருமான சு.வெங்கடேசன், சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர் தோப்பில் முகம்மதுமீரான், பேராசிரியர் “மேலும்” சிவசு, கவிஞர் கிருஷி, பேராசிரியர் ச.மகாதேவன், எழுத்தாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் மா.முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் ஏற்புரையாற்றுகிறார். 



மாநிலக்குழு உறுப்பினர் க. வடிவேலு நன்றி கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்