சௌந்தர மகாதேவன் கவிதைகள் தொகுப்பு : தண்ணீர் ஊசிகள்

சௌந்தர மகாதேவன் கவிதைகள்

தடம்
..........

யார் வந்தாலும் அடையாளமாய் 
எதையாவது 
விட்டுச் செல்கிறார்கள்.
பாட்டியின் வெள்ளைமுடி
பட்டாசல் முழுக்கப் பறக்கும்.
சின்னத் தாத்தா வந்துசென்றபின்
ஒருவாரம் மூக்குப்பொடி வாசம்
வீடுமுழுக்க வீசும்.
பிள்ளைகள் முழுப்பரிட்சை லீவுக்கு
வந்தால் வீடெலாம் குட்டிக் கார்ப்பொம்மைகள்.
திம்மராஜபுரம் காந்திமதியக்கா தயிர்விற்க
வந்த தடம் வெள்ளைச்சுவரில் நீள்தீற்றல்களாய்.
பெரியம்மா வாழ்ந்துசென்ற அடையாளமாய்
அவள் காசியில் வாங்கிவந்த கங்கைச்செம்பு.
இப்படி எல்லோரும் ஏதோவொரு 
அடையாளத்தைத் தான் வந்ததன் 
தடமாய் விட்டுச் செல்கிறார்கள்
என் நினைவின் அடையாளமாய் 
நான் எழுதுகிற இந்தக் கவிதைமாதிரி.
*

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்