திருநெல்வேலியில் நூல்கள் வெளியீட்டு விழா



மனதிற்கு நிறைவளித்த நிமிடங்கள்
 
ரோஜாக்கள் மிக அழகாக இருக்கின்றன, ஏனெனில் அவை ஒருபோதும் தாமரைகளாக மாறமுயல்வதில்லை ஓஷோ சொன்னதாக இன்று காலையில் முகநூலில் படித்தேன்.

 நாம் யாரைப்போலவோ மாறநினைத்து இறுதியில் நம் முகத்தையும் நம் அகத்தையும் தொலைத்து வாழத்தொடங்கிவிட்டோம். 

குழந்தைகள் நூலகம் இல்லை, குழந்தைகளுக்குக் கதை சொல்ல நாம் தயார் இல்லை. குழந்தைகள் பத்திரிகை குறித்து நமக்குக் கவனம் இல்லை.

குழந்தைகள் கனவுகுறித்து நமக்குக் கவலை இல்லை. குழந்தைகள் குறித்து திருமதி லதா ரஜினிகாந்த் ஆனந்த விகடனில் “அவர்கள் சின்னஞ்சிறுமனிதர்கள்” எனும் தொடர் எழுதினார்கள்.

 கல்லூரியில் பயின்றபோது அதற்கு 75 பக்க அளவில் விமர்சனம் எழுதி அனுப்பிவைத்தேன். 1998 ஆம் ஆண்டு சென்னை நூற்றாண்டுவிழா அரங்கில் நடைபெற்ற தி-ஆஸ்ரம் பள்ளிவிழாவில் அதை நூலாக அவர் வெளியிட்டார்.

கல்லூரி மாணவனான என்னை அப்போது திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்கள் சிறப்புவிருந்தினராய் அழைத்திருந்தார்கள். சமீபத்தில் மறைந்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் அந்த நூலை வெளியிடவந்திருந்தார்கள்.

 திரு.ரஜினிகாந்த் அவர்கள் அந்த நூலை வெளியிட்டார்கள்.

அதேபோன்ற அழகான ஒரு நூல் குறித்து நெல்லையில் நடைபெற்ற திரு.இளங்கோவன் அவர்களின்   “பெற்றோர்கள், குழந்தைகள், கனவுகள் நனவாக அறிவுமேதையாக” என்ற நூல் வெளியீட்டுவிழாவில் பேசினேன். 
 
176 பக்கங்களும் வண்ணப்படங்களோடு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி,சேவியர் கல்லூரி அதிபர் அருட்தந்தை டேனிஸ் பொன்னையா ஆகியோரின் வாழ்த்துரையோடு மிக அழகாக வந்திருந்த அந்த நூல் குழந்தைகள் குறித்துக் கவலைப்படுகிறது. 

மூளையைச் சுறுசுறுப்பாக்கும் முத்திரைகள் குறித்துப் பேசுகிறது.

உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள் குறித்துப் பேசுகிறது.

 உடல் நலத்தை மறந்துவிட்டு தூக்கத்தை மறந்துவிட்டு இரவுபகலாய் முகநூலிலும் இணையதளத்திலும் ஆழ்ந்துகிடக்கும் நம்மைப் பற்றிக் கவலைப்படுகிறது.
 
 மனஅழுத்தத்தைக் குறைக்க வழிசொல்கிறது.உணவு உண்ணும் முறைகுறித்துப் பேசுகிறது. 
 
இருகைகளையும் இதயதிற்கு நேரே வைத்து வணங்குங்கள் எல்லா நலனும் கிடைக்கும் என்று அந்த நூல் புத்தரின் அஞ்சலி முத்திரை குறித்து பேசுகிறது.

 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் முனைவர் கருணாகரன் அவர்கள், டி.ஐ.ஜி. முனைவர் முருகன் அவர்கள்,நெல்லையின் அனைத்துக் கல்லூரித் தாளாளர்கள் முன்னிலையில் அந்த அழகான நூல்குறித்துப் பேசினேன்
 
நூறாண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் என்ற அரியநூலோடு, வ.உ.சிதம்பரனார் மாவட்டம் ஊரும் பழஞ்சிறப்பும் என்ற அரியநூலும் அந்த விழாவில் வெளியிடப்பட்டன.

நல்ல மனிதர்கள் கைக்காசை இழந்தாவது நல்ல செய்திகளை மக்களுக்குத் தொடர்ந்து தந்துகொண்டே இருக்கிறார்கள். வாழ்த்தலமே டாக்டர் இளங்கோ அவர்களை ( 9843055210,0462- 2552828)

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்