பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சீதக்காதி தமிழ்ப் பேரவை மாணவர் பேரவையுடன் இணைந்து நடத்திய தீபாவளிப் பட்டிமண்டபம்


    பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையின் சீதக்காதி தமிழ்ப் பேரவையும் மாணவர் பேரவையும் இணைந்து 25.10.2016 அன்று தீபாவளிச் சிறப்புப் பட்டிமண்டபத்தை நடத்தின.

    கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் பட்டிமண்டபத்தைத் தொடங்கி வைத்துத் தலைமையுரையாற்றினார். 
அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் ஏ. அப்துல் காதர், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அ.மு. அயூப்கான், அ.சே. சேக் சிந்தா, அனுசுயா, மாலிக், சாதிக் அலி, குமார், ஜிதேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    பண்டிகைக் கொண்டாட்டங்களால் நமக்கு ஏற்படுவது மனநிறைவா? பணச் செலவா? எனும் தலைப்பிலான பட்டிமண்டப நடுவராக சங்கர் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கோ. கணபதி சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேச, மனநிறைவே! எனும் அணியில் தேவி, ராதா, பிரியதர்~pனி ஆகியோர் பேசினர்.

 பணச் செலவே எனும் தலைப்பில் முத்தமிழ், ஆசிரியர் இளங்கோ, மாணவர் சம்சுதீன் ஆகியோர் பேசினர். விழா முடிவில் நடுவர் மனநிறைவே! என்று தீர்ப்பளித்தார். 





    மாணவர் பேரவைத் தலைவர் சா. முஹம்மது யூசுப் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளைச் சீதக்காதி தமிழ்ப் பேரவையும் மாணவர் பேரவையும் இணைந்து செய்திருந்தன. 


படத்தில்:
 பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சீதக்காதி தமிழ்ப் பேரவை மாணவர் பேரவையோடு இணைந்து நடத்திய தீபாவளிப் பட்டிமண்டபம்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்