மேலும் இலக்கிய அமைப்பு நடத்தும் இருநாள் தேசியக் கருத்தரங்கம்


டிச.17,18 ஆகிய நாட்களில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடக்கிறது

*நோபல் பரிசு பெற்ற நாவல் குறித்த ஆய்வுரை

*வண்ணநிலவன் படைப்புலகம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கம்

 திருநெல்வேலியில் செயல்பட்டுவரும் மேலும் இலக்கிய அமைப்பு உலகஅளவில் கவனம் பெறும் படைப்பிலக்கியங்கள் குறித்தும் தமிழின் சிறப்பான படைப்பிலக்கிய ஆளுமைகள் குறித்தும் ஆய்வுமாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகளை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

இவ்வாண்டுக்கான கருத்தரங்கினை மேலும் இலக்கிய அமைப்பு டிச.17,18 2016 ஆகிய நாட்களில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடத்த உள்ளது. மேலும் இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு, தலைவர் பேராசிரியர் கட்டளை கைலாசம், செயலாளர் பேராசிரியர் ச.மகாதேவன் ஆகியோர் வரவேற்றுப் பேசுகின்றனர்.

நோபல் பரிசு பெற்ற நாவல் குறித்த ஆய்வுரை

முதல் நாளில் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் நோபல் பரிசுபெற்ற நாவல்தனிமையின் நூறு ஆண்டுகள் (One Hundred years of solitude), தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவல் இரண்டையும், ‘மாய யதார்த்தவாதப் (Magical Realism) பின்புலத்தில் ஒப்பிட்டு உரையாற்றுகிறார்கள். மொழிபெயர்ப்பாளர்  பேராசிரியர் சா.தேவதாஸ், நெய்யூர் லட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் சேவியர் சந்திரபோஸ் , தூத்துக்குடி வ.உ.சிகல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் மணிவண்ணன், சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர்
முனைவர் கண்ணன், சென்னை தலைமைச் செயலகத் துணைச் செயலர் முத்துகிருஷ்ணன், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியை முனைவர் வனிதா, திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம், ஆந்திரா விமல்சண்முககுமார் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்துகின்றனர்.

வண்ணநிலவன் படைப்புலகம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கம்

தமிழின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழும் வண்ணநிலவன், தாமிரவருணிக் கதைகள், எஸ்தர், பாம்பும் பிடாரனும் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் கடல்புரத்தில், கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு போன்ற நாவல்களை எழுதியுள்ள மூத்தபடைப்பாளர் வண்ணநிலவன் படைப்புலகம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் டிச.18 ஞாயிறு அன்று மேலும் இலக்கிய அமைப்பு நடத்த உள்ளது.

வார்ஸா பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர்  தமிழவன் தொடக்கவுரையாற்றுகிறார். வண்ணநிலவன் கவிதைகள்  எனும் பொருளில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ச. மகாதேவன் ஆய்வுரை நிகழ்த்துகிறார்.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் நா. ஜிதேந்திரன் வண்ணநிலவன் நாவல்கள் எனும் பொருளிலும் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியை முனைவர் மரகதவள்ளி வண்ணநிலவன் சிறுகதைகள் எனும் தலைப்பிலும் ஆய்வுரை நிகழ்த்துகின்றனர். பதிவுக் கட்டணம்  மாணவர்கள்  ரூ 100 ம் பேராசிரியர்கள் ரூ 200 ம் செலுத்தவேண்டும்


வண்ணதாசன் நிறைவுரை

சிறப்புவிருந்தினராகப் பங்கேற்றுத் தமிழின் மூத்தபடைப்பாளர் வண்ணதாசன் நிறைவுரையாற்றுகிறார். கலந்துகொள்ள விரும்புவோர்  சிவசு, 9, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை– 627 002. என்ற முகவரிக்கோ அவரது செல்பேசி எண்ணுக்கோ : 94437 17804 தொடர்புகொள்ளலாம் என்று மேலும் இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு, தலைவர் பேராசிரியர் கட்டளை கைலாசம், செயலாளர் பேராசிரியர் ச.மகாதேவன் ஆகியோர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.









Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்