திருநெல்வேலி,சௌந்தர மகாதேவன் கவிதை



 
எப்போதும் என்னை
 ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன
உண்மைப் பூக்களின்
உருவைப் போலவே
உருக்கொள்ளும் நெகிழிப் பூக்கள்
பாயைப்போல்,சொளவு போல்
குப்பைகூட்டும் வாரியல் போல்
நெகிழியைப்போல்
பல்கிப்பெருகிய பொருளைப்போல்
பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை
அப்பா உருவைப்போல மட்டும்தான்
நெகிழி உருப்பெறவில்லை
இது வெறும் புகழ்ச்சியிலை
உண்மையென உளமுரைக்கும்
உள்ளுக்குள் கேட்டுப்பாரும்
திண்ணைகள் தின்ற தெருக்கள்,
அளிக்கம்பிகள் இல்லாக் கதவுகள்,
தன்னைத்தானே பூட்டிக்கொண்டு
சொந்தச் சிறையில் இருக்கும்
 விந்தைமனிதர்கள்,
நீர்மோர் தராத சாவடிகள்,
,இவற்றுக்கு மத்தியில்
ஊர்ந்து செல்கின்றன
எதற்கும் உதவாத நெகிழியைப் போல்
பள பளக்கின்றன பால்பாக்கெட்டும்
பார்சல் சாம்பாரும் நெகிழியின் நெருக்கத்தில்.

சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்