திருநெல்வேலி. சவுந்தர மகாதேவன் தமிழ்க்கவிதைகள்







பழமொழி

எதுவும் தெரியாத
மக்கென்று பரிகசித்தாய்
கற்கத் துணிந்தேன்
மெத்தப் படித்த திமிரென்றாய்
மெல்ல அழுததோடு
அமைதி காத்தேன்
அமைதியும் ஒரு வகை
அகம் பாவம் தானென்றாய்
ஊமையாய் உலவினேன்
ஊமை ஊரைக் கெடுக்கும்
பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும், என்று
பழமொழி கொண்டு
பலமாகத் தாக்கினாய்
நீ குற்றம் சொல்வதிலேயே
குறியாயிருப்பவன் என்பதால்
இப்போதெல்லாம்
சும்மாயிருத்தலே
சுகமென்றிருக்கிறேன்
மூளையைக் கூர்தீட்டி
அதற்கொரு பழமொழியை
இதற்குள் தேடியிருப்பாயே!
சொல்லித் தொலை
என்ன செய்ய?
கேட்டுத் தொலைக்கிறேன்.



ஓட்டம் ….

மின்சேமக்கலனில்
மின்சாரம்
மிச்சமிருக்கிறவரை
ஒன்றின் மீதொன்று
ஊர்ந்து ஓடுகிற
கடிகார முட்களைப் போல
உயிர் மிச்சமிருக்கிறவரை
ஒருவரையொருவர்
காரணமில்லாமல்
கடந்து ஓடித்தானேயாக வேண்டும்.

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.


அலை

ஆர்ப்பரிக்கும்
அலைகளினூடேயும்
அமைதியாக
சலனமற்று
சம்மணமிட்டுப் பரவிநிற்கும்
நடுக்கடல் மாதிரி
வேகமான வாழ்வுப் பரப்பிற்கு மத்தியில்
மரணம்
மவுனமாய்
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறது.

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்