காலஓட்டம் .சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி.



எல்லோருக்கும் பிடித்துக் கொள்ள
ஒரு சுட்டுவிரல் மிச்சமிருக்கிறது.
 அந்தக் கரத்தைத்தேடித்தானே
இந்தக் காலஓட்டம்.
முன் தயாரிப்பற்ற வாழ்வின் நகர்வுகளில்
 நாம் அடையாளம் காண்கிறோம்
அன்பான இதயங்கள் பலவற்றை.
குடித்து முடித்த பின்னும்
நாத்தேடுகிற இளநீர்த் துளிகளைப் போல்
இப்போதெல்லாம்
மனம் உண்மையான அன்புதேடிஅலைகிறது .
மாசுமருவற்ற நல்லமனிதர்களை.
கனிவாயிருக்கிறவரையே
 களவாடப்படுகிறோம் எல்லோராலும்.
ஈசலுக்கும் திறந்திருக்கும்
எப்போதும் இயற்கையின் வாசல்.
அவநம்பிக்கையின் அகழியில்
அடிக்கடி அமிழ்கிறது
இந்த அன்புமனம்.
கம்புபற்றி மேல்எழும்
 வெற்றிலைக்கொடியாய்
 அன்பு பற்றி வளரும் நம்மீதும்.
வெறுப்பின் கருப்பு
நம் முகத்தை இன்னும் குரூரமாக்குகிறது.
நதிநீரின் இறுதித்துளிகளை நம்பி
ஏதோ ஒரு கடைசிமீன் காத்திருக்கலாம்.
ஆகவே அன்புசெலுத்து
 அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி 

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி.





Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்