21.5.2017 தி இந்து தலையங்கத்தை முன்வைத்து

21.5.2017 தி இந்து தலையங்கத்தை முன்வைத்து
            வலைப்பூ எனும் இணைய சிலேட்டு
பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி
சமூக ஊடகங்களில் வலைப்பூக்கள் குறித்த தலையங்கம் நியாயமான கவலையை முன்வைத்தது.
முகநூலும் டுவிட்டரும் வந்தபின்னர் வலைப்பூவில் எழுதும் பதிவர்களின் எண்ணிக்கைக் குறைந்துபோனது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வலைப் பூக்களில் எழுதிவரும் நான் ஒருங்குறியில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டதே வலைப்பூ உருவாக்கியபின்தான்.
வலைப்பூ இணையப் பதிவர்களுக்கு எழுதிப்பழகும் சிலேட்டாகத் திகழ்கிறது. நாம் எழுதிய எழுத்துகளை மிக நேர்த்தியாக ஆவணப்படுத்தும் கலமாகவும் திகழ்கிறது.
உரியகுறிச்சொற்களோடு நாம் வலைப்பூக்களில் சேமித்துவைக்கும் நம் கட்டுரைகளைத் தேடுபொறிகள் உரியவர்களுக்கு எடுத்து அழகாகத் தந்துவிடுவதால் நமக்கான எழுத்தறிமுக அட்டையாகவும் திகழ்கிறது.
காலவரிசையில் இணையம் நம் படைப்புகளைச் சேமித்து வைத்திருப்பதால் அவற்றைத் தொகுப்பதும் நூலாக மாற்றுவதும் வெகுஎளிதாக அமைகிறது.
 நமக்குப் பிடித்த வலைப்பதிவுகளை நம் கவனத்திற்குக் கொண்டுவந்து வாசிக்கத் தூண்டுகிறது. நம்முடைய இணையப்பதிவு உலகாளாவிய அளவில் இன்று எத்தனை மக்களால் வாசிக்கபட்டது என்று தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

வலைப்பூக்களில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களில் பலர் உடனே கிடைக்கும் வாசகர்களின் எதிர்வினைக்காக முகநூலில் அதிக கவனம் செலுத்திவருகின்றனர். ஆனால் தொடர்ந்து வலைப்பூக்களிலும் அவர்கள் எழுதவேண்டும்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்