மொழி எனும் உளிசெதுக்கிய தேவதச்சன் கவிதைகள்


......................................................................................................................
சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி

தேவதச்சன் காட்டும் அகம்புறம் அலாதியானது. அன்றாட வாழ்க்கைக்கு வெகுநெருக்கமானது. அகம் புறம் என்று இருவெளிகளில் மாறிமாறி இயங்கும் அவரது கவியுலகம் குறித்துக் கட்டுரையாளர் தெளிவாக எழுதியிருந்தார். கவிதை நினைவின் தன்னிலையை இயங்கச் செய்கிறது என்று கூறும் தேவதச்சன் கவிதைகள் சொற்களைக் கடந்து வேறு பலவற்றைச் சொல்லி வாசகர்களுக்கு புதுஅனுபவம் தருபவை. அவர் பார்வை வேறுபட்டது.மொழியின் வழியே அவர் கட்டமைக்கும் கவிப்பிம்பம் வெகுநுட்பமானது, தமிழ் மண்ணின் நீண்ட தொன்மையையும் தொடர்ச்சியையும் உள்ளடக்கியது. மருத்துவமனை வெண்தொட்டிலில் இறந்துகொண்டிருக்கும் குழந்தையைக் காட்சிப்படுத்திய தேவதச்சன்,தன் இதயத்தில் எதிரே பல்லி இருப்பதை அறியாமல் சுற்றிக்கொண்டிருக்கும் குருட்டு ஈயோடு இணைத்துப் பார்த்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். “என் அன்பின் சிப்பியை யாரும் திறக்கவரவில்லை”என்ற அவரது கவிதை வரி எனக்கு மிகவும் பிடித்தமானது.இதுபோன்ற இலக்கியக் கட்டுரைகள் இளையதலைமுறை எழுத்தாளர்களுக்குத் தரமான எழுத்துகளை அறிமுகப்படுத்தவும் அவர்கள் தரமாக எழுதவும் துணைநிற்கும்.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்